நல்லகூத்தய்யனார்-உசிலடிகருப்பு கோவில் தேரோட்டம்


நல்லகூத்தய்யனார்-உசிலடிகருப்பு கோவில் தேரோட்டம்
x

நல்லகூத்தய்யனார்-உசிலடிகருப்பு கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

திருச்சி

புள்ளம்பாடி ஒன்றியம் வந்தலை கூடலூர் கிராமத்தில் உள்ள நல்ல கூத்தய்யனார் சாமி, உசிலடி கருப்புசாமி கோவில் திருவிழா கடந்த 8-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நேற்றுமுன்தினம் இரவு சாமிகள் குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவின் சிகரநிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக அய்யனார் அலங்கரிக்கப்பட்டு தேருக்கு அழைத்து செல்லப்பட்டார். சிறப்பு பூஜைக்கு பின் காலை 11 மணியளவில் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்கியது. இதில் வந்தலைகூடலூர், சிறுவயலூர், காணக்கிளியநல்லூர், பு.சங்கேந்தி, நஞ்சை சங்கேந்தி, குமுளூர், புள்ளம்பாடி, கல்லக்குடி, சிறுவயலூர், தாப்பாய், வரகுப்பை, மேலரசூர் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது.விழாவிற்கான ஏற்பாடுகளை ஊராட்சிமன்ற துணைத்தலைவர் முருகேசன் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள், இளைஞர்கள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். கல்லக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.


Next Story