நாமக்கல் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அதிக சிகிச்சைகள் அளித்த ஆஸ்பத்திரிகளுக்கு பாராட்டு சான்றிதழ் கலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கினார்
நாமக்கல் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அதிக சிகிச்சைகள் அளித்த ஆஸ்பத்திரிகளுக்கு பாராட்டு சான்றிதழ் கலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கினார்
நாமக்கல் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அதிக சிகிச்சைகள் அளித்த ஆஸ்பத்திரிகளுக்கு பாராட்டு சான்றிதழை கலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கினார்.
சான்றிதழ்கள்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் அதிகளவில் சிகிச்சை அளித்த ஆஸ்பத்திரிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கினார்.
இதில் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.26.94 லட்சம் மதிப்பீட்டில் 290 நோயாளிகளுக்கும், திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் ரூ.26.96 லட்சம் மதிப்பீட்டில் 377 நோயாளிகளுக்கும் பல்வேறு சிகிச்சைகள் அழைக்கப்பட்டதற்கு கலெக்டர் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.
மருத்துவ காப்பீடு அட்டை
மேலும் நாமக்கல் அரவிந்த் ஆஸ்பத்திரியில் 201 நோயாளிகளுக்கு ரூ.86.11 லட்சத்திலும், நாமக்கல் மகாராஜா சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் 117 நோயாளிகளுக்கு ரூ.10.29 லட்சத்திலும் பல்வேறு சிகிச்சைகள் அளித்ததற்காக பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அதேபோல் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டைகளையும், மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு நலம் பெற்ற பயனாளிகளுக்கு பழக்கூடைகளையும் கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் இணை இயக்குனர் (மருத்துவ நல பணிகள்) ராஜ்மோகன், மாவட்ட திட்ட அலுவலர் (முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்) சுரேஷ்குமார் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.