பெயர் பலகையை சரி செய்ய வேண்டும்
பெயர் பலகையை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ராணிப்பேட்டை
வாலாஜா பஸ் நிலையம் அருகில், சென்னை, சோளிங்கர் செல்லும் வழிகளின் தூர அளவுகளை குறிப்பிடும் வழிகாட்டி பலகை உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பலகையின் அடிப்பகுதி முறிந்து, பலகை கீழே விழுந்தது. பலகையின் அடிப்பகுதி தானாகவே முறிந்து விழுந்ததா? அல்லது நடைபாதை வியாபாரிகள் தங்களின் வசதிக்காக பலகையை உடைத்து கீழே தள்ளினார்களா? என்று சந்தேகமாக உள்ளது. மேலும் நெடுஞ்சாலைத் துறையினரும் இதனை சரி செய்யாமல் மெத்தனமாக உள்ளனர். வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் வழி தெரியாமல் தடுமாற்றம் அடைகின்றனர். எனவே பெயர் பலகையை உடனடியாக புதுப்பித்து அதே இடத்தில் வைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்..
Related Tags :
Next Story