'நம்ம ஊரு சூப்பரு' திட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்


நம்ம ஊரு சூப்பரு திட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
x

‘நம்ம ஊரு சூப்பரு’ திட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் 'நம்ம ஊரு சூப்பரு' என்ற திட்டம் குறித்த மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கருப்பசாமி தலைமை தாங்கினார். இத்திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட அனைத்து கிராம ஊராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் தண்ணீர், சுகாதாரம் மற்றும் திட, திரவக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு பிரசாரம் ஏற்படுத்துதல் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குனர் ரேவதி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ஸ்ருதி, செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) ஜோஸ்மின் நிர்மலா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story