நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு நிகழ்ச்சி


நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது

மயிலாடுதுறை

ஆக்கூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆக்கூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. முகாமிற்கு செம்பனார்கோவில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, வட்டார வளர்ச்சி ஆணையர் மஞ்சுளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் சந்திரமோகன் வரவேற்றார். இதில் வட்டார ஒருங்கிணைப்பாளர் மாதவன்ராஜ் கலந்து கொண்டு மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்தும், சுகாதாரம் மற்றும் திரவ கழிவு மேலாண்மை குறித்தும் மாணவ-மாணவிகளுக்கு விளக்கம் அளித்தார்.

இதேபோல் திருக்கடையூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு நிகழ்ச்சி திருக்கடையூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. முகாமிற்கு செம்பனார்கோவில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணை தலைவர் பாஸ்கர், ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ் வரவேற்றார். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.


Next Story