'நம்ம ஊரு சூப்பரு' திட்ட விழிப்புணர்வு ஊர்வலம்
மேலையூரில் ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றியக்குழு தலைவர் தொடங்கி வைத்தார்
திருவெண்காடு:
பூம்புகார் ஊராட்சி மேலையூரில் 'நம்ம ஊரு சூப்பரு' திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்திற்கு சீர்காழி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் ஒன்றிய ஆணையர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) அருள்மொழி, ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பவள்ளி ராஜா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பால்ராஜ், திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டனர். இதே போல் திருவெண்காடு ஊராட்சியில் நடந்த ஊர்வலத்திற்கு தலைவர் சுகந்தி நடராஜன் தலைமை தாங்கினார்.. துணைத் தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் பஞ்சு குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி ஆகியோர் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். மணி கிராமம் ஊராட்சியில் நடந்த ஊர்வலத்துக்கு தலைவர் முல்லைவேந்தன் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் சந்தோஷ் குமார் வரவேற்றார். இதில் கலந்து கொண்டவர்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என்று உறுதிமொழி ஏற்றனர். திருநகரி ஊராட்சியில் தலைவர் சுந்தரராஜன் தலைமையிலும், காத்திருப்பு ஊராட்சியில் தலைவர் அன்புமணி மணிமாறன் தலைமையிலும், திருவாளி ஊராட்சியில் தலைவர் தாமரைச்செல்வி திருமாறன் தலைமையிலும், மங்கை மடம் ஊராட்சியில் தலைவர் சோமசுந்தரம் தலைமையிலும் ஊர்வலம் நடந்தது.