நம்மாழ்வார் வைணவ சபை மாநாடு


நம்மாழ்வார் வைணவ சபை மாநாடு
x
தினத்தந்தி 20 Sept 2022 12:15 AM IST (Updated: 20 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் நம்மாழ்வார் வைணவ சபை மாநாடு

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரத்தில் மாவட்ட நம்மாழ்வார் வைணவ சபையின் சார்பில் 16-ம் ஆண்டு வைணவ மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக்கு வைணவ சபை மாவட்ட செயலாளர் குமார் தலைமை தாங்கினார். சபை இணை தலைவர் பாண்டுரங்கன், துணைத்தலைவர் ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் லட்சுமண சுவாமிகள் வரவேற்றார். திருக்கோவிலூர் 26-ம் பட்டம் ஜீயர் சுவாமிகள் கலந்துகொண்டு பக்தர்களுக்கு ஆசியுரை வழங்கி பேசினார். காஞ்சீபுரம் ஆராவமுதன் ராமானுஜதாசன் திவ்யமும்- திருவாய்மொழியும் என்ற தலைப்பில் பேசினார். திருக்கடிகை செல்வநாராயணன் சுவாமிகள், அநந்தாழ்வான் வைபவம் குறித்து பேசினார்.

இம்மாநாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த வைணவ பஜனை குழுக்களை சேர்ந்த நிர்வாகிகள், வைணவ தொண்டர்கள் கலந்துகொண்டனர். முடிவில் பொருளாளர் ராமசாமி நன்றி கூறினார்.


Next Story