நந்திகேஸ்வரர் கோவில் குடமுழுக்கு ஆலோசனை கூட்டம்
வேதாமிர்த ஏரி மைய பகுதியில் உள்ள நந்திகேஸ்வரர் கோவில் குடமுழுக்கு ஆலோசனை கூட்டம்
வேதாரண்யம்:
வேதாரண்யம்-நாகை சாலையில் 17 ஏக்கரில் ராஜ ராஜ சோழன் காலத்தில் வெட்டப்பட்ட வேதாமிர்த ஏரி உள்ளது. இந்த ஏரியின் மைய பகுதியில் ரூ.2 கோடியில் புதிய நந்தி சிலை நிறுவப்பட்டது. அதை தொடர்ந்து வேதாமிர்த ஏரி 70 ஆண்டுகளுக்கு பிறகு தூர்வாரப்பட்டு, தடுப்பு சுவர்கள், படித்துறை, பூங்கா, சுற்றுலா படகு இயங்கு தளம் போன்ற வசதிகளுடன் ரூ.9 கோடியில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏரியின் மைய பகுதியில் உள்ள நீராடி மண்டபத்தில் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. தலைமையிலான திருப்பணி குழு சார்பில் 6 அடி உயரத்தில் ஒரே கல்லாலான நந்தீஸ்வரர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இப்பணிகள் நிறைவடைந்து வருகிற 4-ந் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுப்பையன், ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன், துணை தலைவர் அறிவழகன், வக்கீல்கள் கிரிதரன், நமச்சிவாயம், நுகர்வோர் பாதுகாப்பு குழு முன்னாள் பொருளாளர் மோகன், ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜரத்தினம், நகர்மன்ற துணைத்தலைவர் சுரேஷ் பாபு உள்ளிட்ட திருப்பணி குழுவினர் கலந்து கொண்டனர்.