நங்கவரம் பேரூராட்சி சாதாரண கூட்டம்
நங்கவரம் பேரூராட்சி சாதாரண கூட்டம் நடந்தது.
கரூர்
குளித்தலை ஒன்றியம் நங்கவரம் பேரூராட்சி சாதாரண கூட்டம் கூட்ட மன்றத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் ராஜேஸ்வரி சுந்தரம் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தின் தீர்மானங்களை பேரூராட்சி இளநிலை உதவியாளர் நித்தியமணி வாசித்தார். கூட்டத்தில் வளமீட்பு பூங்காவில் குப்பை உலர்களம் ரூ.15 லட்சத்தில் அமைப்பது, பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும், 34 வகையான பணிகள் மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களும் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது. இதில், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், செல்வகுமார், அமுதா, செந்தில்வேலன், பாஸ்கர், ராசப்பன், குணசேகர், சீதா, அமுதவள்ளி, சக்திவேல், ரவிச்சந்திரன், மல்லிகா, பாலன், பரமேஸ்வரி, அம்சு, வசந்தி, லதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story