நாங்குநேரி யூனியன் சிறப்பு கூட்டம்


நாங்குநேரி யூனியன் சிறப்பு கூட்டம்
x

நாங்குநேரி யூனியன் சிறப்பு கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

இட்டமொழி:

நாங்குநேரி யூனியன் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. யூனியன் தலைவர் சவுமியா எட்வின் தலைமை தாங்கினார். யூனியன் ஆணையாளர் கிஷோர்குமார், துணைத்தலைவர் இசக்கிபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நாங்குநேரி பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை திட்டமான விடுபட்ட 46 குளங்களுக்கு தனி கால்வாய் விரைவில் அமைப்பது. இது சம்பந்தமாக முதல்-அமைச்சர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து தேவையான நிதி ஒதுக்க கோரியும், அந்தப்பணி நடைபெறும் வரை அந்த குளங்களுக்கு தண்ணீர் செல்லும் கால்வாய்களை உடனடியாக ஆழப்படுத்தி சுத்தப்படுத்தி தண்ணீரை கொண்டு செல்ல ரூ.30 லட்சம் ஒதுக்குவது. மேலும் குளங்களின் மடைகள் மறுகால்கள் சீரமைக்க ரூ.20 லட்சம் ஒதுக்குவது. நாங்குநேரி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அத்தனை தொடக்கப்பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் சுத்தமான சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் மாணவர்களுக்கு கொடுக்கவும் தேவையான நிதி ஒதுக்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. யூனியன் மேலாளர் செல்வன் நன்றி கூறினார்.


Next Story