நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோவிலில்பவுர்ணமி சிறப்பு வழிபாடு


தினத்தந்தி 5 Jun 2023 12:15 AM IST (Updated: 5 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது.

தூத்துக்குடி

மெஞ்ஞானபுரம்:

மெஞ்ஞானபுரம் அருகே உள்ள நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் சுவாமி, அம்பாள், ஜடாமுடி சித்தர் ஆகியோருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று, அலங்கார தீபாராதனைக்கு பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் ஓம் நமசிவாய மந்திர ஜெபம் எழுதி வந்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் சுற்று வட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story