நரசிம்ம பெருமாள் கோவில் குடமுழுக்கு


நரசிம்ம பெருமாள் கோவில் குடமுழுக்கு
x
தினத்தந்தி 29 April 2023 12:15 AM IST (Updated: 29 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குத்தாலம் அருகே நரசிம்ம பெருமாள் கோவில் குடமுழுக்கு

மயிலாடுதுறை

குத்தாலம்:

குத்தாலம் அருகே திருமங்கலம் ஊராட்சி செண்பகச்சேரியில் நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. சுயம்புவாக தோன்றிய இந்த கோவிலில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு குடமுழுக்கு விழா கடந்த 25-ந் தேதி பகவத் அனுக்ஞை, பாகவத அனுக்ஞையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 3 கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று, பூர்ணாகுதி நடந்தது. அதனைத்தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு நடைபெற்று கோவிலை வலம் வந்து விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதே போல கருடாழ்வார் செல்வ கணபதி யோக மகா வராகி அம்மன் மற்றும் மூலவ மூர்த்திகளுக்கும் குடமுழுக்கு விழா நடத்தி வைக்கப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி செந்தில்குமார் மற்றும் செண்பகச்சேரி கிராமமக்கள் செய்திருந்தனர்.


Next Story