நாராயண சுவாமி கோவில் ஆவணி திருவிழா தேரோட்டம்


நாராயண சுவாமி கோவில் ஆவணி திருவிழா தேரோட்டம்
x

அம்பை நாராயண சுவாமி கோவில் ஆவணி திருவிழா தேரோட்டம் நடந்தது.

திருநெல்வேலி

அம்பை அருகே வாகைக்குளம் வாகைபதி அய்யா ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவிலில் ஆவணி பெருந்திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் அய்யா தண்டில் வாகனம், கருட வாகனம், சிம்ம வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதிஉலா நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான 8, 10-ம் திருவிழாக்களில் பால்குடம் எடுத்தல், சந்தன குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. விழா நாட்களில் தினமும் உகப்படிப்பு, உச்சிப்படிப்பு, பணிவிடை, பால் தர்மம் மற்றும் இரவு 8 மணிக்கு மேல் அன்ன தர்மம் உள்ளிட்ட நிகழ்ச்சி நடந்து வருகிறது.

சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் நாராயண சுவாமி எழுந்தருளி கோவிலை சுற்றி பவனி வந்தார். இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த அன்பு கொடிமக்கள் திரளாக பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு வாணவேடிக்கையும், சிறுமிகளின் கோலாட்டம் நடந்தது. இரவு 11 மணிக்கு அய்யா காளை வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை வாகைபதி அன்பு கொடிமக்கள் செய்திருந்தனர்.


Next Story