நாராயண சுவாமி கோவில் தேரோட்டம்


நாராயண சுவாமி கோவில் தேரோட்டம்
x

நாராயண சுவாமி கோவில் தேரோட்டம் நடந்தது.

திருநெல்வேலி

அம்பை:

அம்பாசமுத்திரம் அருகே உள்ள வாகைகுளம் வாகைப்பதி அய்யா வைகுண்டர் ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அய்யா வைகுண்டர், அனுமன், கருடன், நாகம், சூரியன், பூபல்லக்கு, அன்னம், இந்திரன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி காட்சியளித்தார். 11 நாட்கள் நடைபெற்ற திருவிழாவை முன்னிட்டு முழு நேரம் நடைதிறப்பு மற்றும் தினமும் மதியம் உச்சி படிப்பு மற்றும் அன்னப்பால் கஞ்சி தர்மமும், இரவு 7 மணிக்கு மேல் அன்னதர்மமும் நடைபெற்றது.

8-ம் திருநாள் அன்று அய்யா வைகுண்டர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கலி வேட்டையாடுதல் நிகழ்ச்சியும், 10-ம் திருநாளன்று முந்திரிக் கிணற்றில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் சந்தன குடம், பால்குடம் மற்றும் சிறப்பு பணிவிடைகளும் நடைபெற்றது.

சிகர நிகழ்ச்சியாக 11-ம் திருநாளான நேற்று மாலை 5 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வாகைபதி அய்யா வழி பக்தர்களும், அன்பு கொடி மக்கள் மற்றும் ஊர் பொதுமக்களும் கலந்துகொண்டனர். இரவில் ரிஷப வாகனத்தில் அய்யா பவனியாக வந்து கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெற்றது.


Next Story