ரூ.1 லட்சம் போதை பொருட்கள் பறிமுதல்
திருத்துறைப்பூண்டியில் ரூ.1 லட்சம் போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக ஒருவரை கைது செய்து உள்ளனர்.
திருத்துறைப்பூண்டி,திருத்துறைப்பூண்டியில் ரூ.1 லட்சம் போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக ஒருவரை கைது செய்து உள்ளனர்.
போதை பொருட்கள்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதன்பேரில் திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோம சுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன், மற்றும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
கைது
விசாரணையில் வரம்பியம், மெயின் ரோட்டை சேர்ந்த சுகுமார் (வயது46) விற்பனைக்காக ரூ.1 லட்சம் மதிப்புள்ள 29 கிலோ ஹான்ஸ், உள்ளிட்ட புகையிலை போதை பொருட்களை அவரது வீட்டின் பின்புறத்தில் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் சுகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.