நத்தம் ஒன்றியக்குழு கூட்டம்


நத்தம் ஒன்றியக்குழு கூட்டம்
x

நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.

திண்டுக்கல்

நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். ஆணையாளர் முனியாண்டி, துணைத்தலைவர் முத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அலுவலக மேலாளர் சாந்திதேவி வரவேற்றார். கூட்ட அறிக்கையை இளநிலை உதவியாளர் கருப்பணபிள்ளை வாசித்தார். பின்னர் வரவு-செலவு கணக்குகள் வாசிக்கப்பட்டது. பின்னர் கூட்டத்தில் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் கவுன்சிலர்களின் பல்வேறு கேள்விகளுக்கு, தலைவரும், அதிகாரிகளும் பதில் அளித்தனர். இந்த கூட்டத்தில் ஒன்றிய பொறியாளர்கள் குபேந்திரன், வெற்றி, மேலாளர் திலகம், ஒன்றிய கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர். முடிவில் காசாளர் கனகராஜ் நன்றி கூறினார்.


Next Story