தேசிய திறனாய்வு தேர்வு பயிற்சி முகாம்


தேசிய திறனாய்வு தேர்வு பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 1 Jan 2023 12:15 AM IST (Updated: 1 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டை அரசு நூலகத்தில் தேசிய திறனாய்வு தேர்வு பயிற்சி முகாம் நடந்தது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை அரசு நூலகத்தில் வைத்து தேசிய திறனாய்வு தேர்வுக்காக 5 நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. 6-வது நாள் மாதிரி தேர்வு நடைபெற்றது. இதில் செங்கோட்டை வட்டார பகுதியில் உள்ள பள்ளிகளில் இருந்து 110 மாணவர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி வகுப்பு மற்றும் மாதிரி தேர்வை ஆய்க்குடியில் உள்ள ஜே.பி. கல்வியியல் கல்லூரி மாணவிகள் நடத்திக் கொடுத்தார்கள். சிறப்பாக நடத்தி கொடுத்த ஜே.பி. கல்வியியல் கல்லூரியை மாணவிகளுக்கும,் ஆசிரியர் ரசாக் ஆகியோர்களுக்கும் நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக நூலகர் ராமசாமி நன்றி தெரிவித்தார்.

தேர்வு இனி வாரந்தோறும் சனி, ஞாயிறுக் கிழமைகளில் பயிற்சி வகுப்பு நூலகத்தில் வைத்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.



Next Story