அரசு ஆஸ்பத்திரிக்கு தேசிய தரச்சான்றிதழ்


அரசு ஆஸ்பத்திரிக்கு தேசிய தரச்சான்றிதழ்
x
தினத்தந்தி 10 April 2023 12:30 AM IST (Updated: 10 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு தேசிய தரச்சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

தேனி

தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு இணையாக கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இங்கு 174 படுக்கைகள் உள்ளன. 24 மணி நேரம் பிரசவம் பார்க்கும் 'சீமாங்' சென்டர் உள்ளது. இந்த மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்றிதழ் பெறுவதற்கான பல்வேறு கட்ட தேர்வு நடத்தப்பட்டன. இதனை தொடர்ந்து இறுதி தேர்வு கடந்த பிப்ரவரி 16-ந்தேதி தேசிய தரச்சான்றிதழ் குழுவினர் பல்லவி அண்ணாராவ் ரெட்டி (மராட்டியம்), சவுமியா (கேரளா), ரேணுபர்மன் (ஹரியானா), பாராசபீ (காஷ்மீர்) ஆகியோர் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் இறுதி கட்ட ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வு அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பினர். அதன் அடிப்படையில் கம்பம் அரசு ஆஸ்பத்திரியின் பொதுப் பிரிவுக்கு 93 மதிப்பெண்களும், சீமாங் சென்டருக்கு 95 மதிப்பெண்களை மத்திய சுகாதாரத்துறை வழங்கி, இறுதி கட்ட தேர்வில் வழங்கப்பட்டது. இதையடுத்து கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு தேசிய தரச்சான்றிதழ் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து ஆஸ்பத்திரி அலுவலர் டாக்டர் பொன்னரசன் கூறுகையில், கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் தேசிய தர குழுவினர் ஆய்வு செய்தனர். தேசிய தரச்சான்றிதழ் தரப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரியில் உள்ள 174 படுக்கைக்கு ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.17 லட்சத்து 40 ஆயிரம் நிதி உதவி தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மத்திய அரசு வழங்க இருக்கிறது. இதன் மூலம் ஆஸ்பத்திரி வளர்ச்சிக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் தேர்வு பெற்றதற்கான சான்றிதழை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார் என்றார்.


Next Story