டெல்லியில் இன்று சமூகநீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் தேசிய மாநாடு..!


டெல்லியில் இன்று சமூகநீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் தேசிய மாநாடு..!
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூகநீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் தேசிய மாநாடு, டெல்லியில் (இன்று) நடைபெறுகிறது.

புதுடெல்லி,

சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு, டெல்லியில் உள்ள கஸ்தூர்பா காந்தி மார்க், கன்னாட் பகுதியில் (இந்தியா கேட் அருகில்) இன்று (திங்கட்கிழமை) மாலை 4.30 முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது.இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முதல்-மந்திரிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள் ஆகியோர் காணொலிக் காட்சி மூலமாக கலந்து கொள்ள உள்ளார்கள்.

இந்த மாநாட்டில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வழியாக கலந்து கொண்டு தலைமையுரை ஆற்றுகிறார். சமூக நீதிக்கான போராட்டத்தையும், சமூக நீதி இயக்கத்திற்கான தேசிய கூட்டு திட்டத்தையும் முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

சமூகம், அரசியல், பொருளாதாரம், மக்கள் மேம்பாடு அனைத்திலும் நவீனமயம் என்கிற திராவிட மாடல் ஆட்சியை தமிழ்நாடு அரசு நடத்தி வரும் நிலையில், சமூக நீதியை தேசிய அளவில் முன்னெடுத்து செல்லும் வகையில் இந்த மாநாடு நடைபெற உள்ளது.


Next Story