தேசிய டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி


தேசிய டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

தேசிய டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாகப்பட்டினம்

நாகை அருகே பொரவாச்சேரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துவ துறை சார்பில் தேசிய டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அதிகாரி லியாக்கத் அலி தலைமை தாங்கினார். மாவட்ட நல கல்வி அலுவலர் மணவாளன், துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் நேர்முக உதவியாளர் கோகுல்நாதன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பொறுப்பு செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதனை தொடர்ந்து டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் 200-க்கு மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். ஊர்வலமானது முக்கிய சாலைகள் வழியாக மீண்டும் கல்லூரியை சென்றடைந்தது. முடிவில் வடுகச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் சுத்தானந்த கணேஷ் நன்றி கூறினார். இதில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளர்கள், களப்பணி உதவியாளர்கள், டெங்கு காய்ச்சல் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story