100 அடி உயரத்தில் பறந்த தேசிய கொடி


100 அடி உயரத்தில் பறந்த தேசிய கொடி
x
தினத்தந்தி 27 Jan 2023 12:30 AM IST (Updated: 27 Jan 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

100 அடி உயரத்தில் தேசிய கொடி பறந்தது.

நாகப்பட்டினம்

நாகை கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயிலில் ஓ.என்.ஜி.சி., சி.பி.சி.எல். நிறுவனங்களின் நிதியுதவியுடன் 100 அடி உயர கொடிக்கம்பம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. நேற்று குடியரசு தின விழாவையொட்டி, 100 அடி உயர கொடிக்கம்பத்தில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலெக்டர் அருண்தம்புராஜ் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர், முகமதுஷநவாஸ் எம்.எல்.ஏ., மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன், கூடுதல் கலெக்டர் பிரித்திவிராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 100 அடி உயரத்தில் பறந்த தேசிய கொடியை பலரும் கண்டு ரசித்தனர்.


Next Story