2 ஆயிரம் பேருக்கு தேசிய கொடிகள்
செங்கோட்டையில் 2 ஆயிரம் பேருக்கு தேசிய கொடிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது
செங்கோட்டை:
செங்கோட்டையில் ரோட்டரி கிளப் சார்பில் நாட்டின் 75-வது சுதந்திர தினவிழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் பொதுமக்களுக்கு இலவச தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நகர்மன்ற தலைவா் ராமலட்சுமி தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளா் பார்கவி, சுகாதார அலுவலா் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளா் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனா். செங்கோட்டை ரோட்டரி கிளப் தலைவா் பால்ராஜ் வரவேற்றார். அதனை தொடா்ந்து ரோட்டரி கிளப் சார்பில் சுமார் 2 ஆயிரம் தேசியக்கொடிகள் நகர்மன்ற தலைவா் ராமலட்சுமியிடம் வழங்கப்பட்டது. பின்னா் தேசியக்கொடிகள் பொதுமக்களுக்கு வீடுவீடாக சென்று இலவசமாக வினியோகிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் செயலாளா் வழக்கறிஞா் அபுஅண்ணாவி, பொருளாளா் ராமகிருஷ்ணன், சரவணமுத்தையா, உறுப்பினா் காதர்மைதீன், நகராட்சி பணியாளா்கள், சுகாதார பணி மேற்பார்வையாளா்கள், துாய்மை இந்திய திட்ட பணியாளா்கள், சுகாதார பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
இதேபோல் செங்கோட்டை நகராட்சி 3-வது வார்டு நகர்மன்ற உறுப்பினா் சுடர்ஒளி ராமதாஸ் தனது சொந்த நிதியில் இருந்து தனது வார்டு பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று இலவசமாக தேசியக்கொடியினை வழங்கினார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளா் பார்கவி, சுகாதார அலுவலா் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளா் பழனிச்சாமி, முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவா் கணேசன், சுகாதார மேற்பார்வையாளா்கள் சமூக ஆர்வலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.