தூத்துக்குடி அருகே தேசிய அளவிலான கடல் சாகச விளையாட்டு போட்டி


தூத்துக்குடி அருகே தேசிய அளவிலான கடல் சாகச விளையாட்டு போட்டி
x

தூத்துக்குடி அருகே தேசிய அளவிலான கடல் சாகச விளையாட்டு போட்டி நடைபெற்றது.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே தேசிய அளவிலான கடல் சாகச விளையாட்டு போட்டிகள் நடந்தன.

கடல் சாகச விளையாட்டு போட்டி

தூத்துக்குடி மாவட்டம் வேப்பலோடை கடற்கரையில் தேசிய அளவிலான கடல்நீர் சாகச விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில் கைட், சர்பிங், கயாக்கிங் வகையான சாகச விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான கடல்நீர் சாகச விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.

பரிசு

இந்த போட்டியில் டையலன் பெர்னான்டோ என்பவர் முதல் பரிசையும், அர்ஜூன் மேத்தா 2-வது பரிசையும், ஜீகான் கோஷி 3-வது பரிசையும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு தூத்துக்குடி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி துணை பொது மேலாளர் செந்தில்வேலாயுதம் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில் தொழில் அதிபர்கள், விளையாட்டு வீரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story