தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி


தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி
x

தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

புதுக்கோட்டை

சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை தேசிய ஊட்டச்சத்து மாதமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் 'ஊட்டச்சத்து மாத விழாவிற்காக ஊராட்சிகளில் ஊட்டச்சத்தை தூண்டுதல்" என்ற தலைப்பில் பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் புதுக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலிருந்து தொடங்கிய தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த பேரணி அண்ணா சிலை, கீழராஜ வீதி, பிருந்தாவனம், வடக்கு ராஜ வீதி வழியாக நகர்மன்றம் சென்றடைந்தது. பேரணியில் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட 275 பேர் கலந்து கொண்டு ஊட்டச்சத்தின் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பேரணியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் புவனேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் கோகுலப்பிரியா, புதுக்கோட்டை ஆர்.டி.ஓ. (பொறுப்பு) கருணாகரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story