தேசிய ஊட்டச்சத்து மாத விழா
தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடைபெற்றது
தொண்டி
திருவாடானை தாலுகா மங்கலகுடி அரசு மேல்நிலைப்பள்ளி, ஆண்டாவூரணி சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் திருவாடானை வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி வளர் இளம் பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கலா தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர்கள் சகாய அருள் செல்வி, அந்தோணி அமல்ராஜ் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் வளரிளம் பெண்களுக்கு ரத்த சோகையை தடுத்தல், சரிவிகித உணவு முறையை கடைப்பிடித்தல், அயோடின் குறைபாடு நீக்குதல், சத்தான உணவு வகைகள், மாதவிடாய் காலங்களில் வளரிளம் பெண்கள் சுத்தம், தன் சுத்தம், குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடர்ந்து பள்ளி மாணவிகள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதனையொட்டி அமைக்கப்பட்டு இருந்த சத்தான காய்கறிகள், பழங்கள், கீரைகள், தானிய வகைகள், இணை உணவு குறித்த விழிப்புணர்வு கண்காட்சியை மாணவிகள் பார்வையிட்டனர். பள்ளி மாணவிகளுக்கு கொழுக்கட்டை, பாயாசம், கேழ்வரகு ரொட்டி, இணை உணவு போன்றவை வழங்கப்பட்டது. இதில் குழந்தை வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர்கள் சந்திரா, மாலா, பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.