டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு


டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு
x
தினத்தந்தி 31 March 2023 12:15 AM IST (Updated: 31 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு நடந்தது. கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ் தொடக்க உரையாற்றினார். உதவி பேராசிரியை உமா வரவேற்று பேசினார். கோவை பாரதியார் பல்கலைக்கழக கல்வியியல் துறை தலைவர் ஜனார்த்தனகுமார் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், 'எதிர்கால கல்வியாளரின் ஆராய்ச்சி திறன்களின் வளர்ச்சி' என்ற தலைப்பில் உரையாற்றினார். மேலும் கற்றல், ஆராய்ச்சி திறன்கள், அவற்றின் நன்மைகள், பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முறைகள் குறித்தும் விளக்கி கூறினார்.

தொடர்ந்து மத்திய பிரதேச மாநில மத்திய பல்கலைக்கழக கல்வியியல் துறை உதவி பேராசிரியர் ஜெயசீலன் செல்வகுமார் 'தற்போதைய சூழ்நிலையில் ஆராய்ச்சி திறன்' என்ற தலைப்பில் உரையாற்றினார். மேலும் ஆராய்ச்சி, அதன் நுணுக்கங்கள், வகைகள், புள்ளிவிவர நுணுக்கங்கள், ஆராய்ச்சி கருவிகளை தயாரிக்கும் முறை, தற்போதைய சூழ்நிலையில் ஆராய்ச்சியின் இன்றைய நிலை குறித்தும் எடுத்துரைத்தார். தொடர்ந்து பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், முதுகலை மாணவர்கள் 31 பேர் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பேராசிரியர் சுரேஷ் நன்றி கூறினார்.


Next Story