தேசிய தர நிர்ணய குழுவினர் ஆய்வு
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தர நிர்ணய குழுவினர் ஆய்வு செய்தனர்.
நாசரேத்:
தூத்துக்குடி மாவட்ட சுகாதார பணிகளின் துணை இயக்குனர் பொற்செல்வன் வழிகாட்டுதலின்படி நாசரேத் அருகிலுள்ள மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தேசிய தர நிர்ணய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.
தேசிய தர நிர்ணய குழுவின் டாக்டர் கிவான் மற்றும் ஜோஸ்லி ஜான் ஆகியோர் வருகை தந்தனர். வருகை புரிந்த தர நிர்ணய குழுவினரை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பார்த்திபன், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சோனியா ஆகியோர் வரவேற்றனர். தேசிய தர நிர்ணய குழுவினர் மூக்குபீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்று வரும் தாய் சேய் நல பணிகளையும், தொற்று நோய் மற்றும் தொற்றா நோய்கள் உள்பட தேசிய நோய் கட்டுப்பாட்டு திட்டப்பணிகளையும் ஆய்வு செய்தனர். இந்நிகழ்வில் டாக்டர்கள் அம்பிகாபதி, கபிலன், முத்துலட்சுமி, சித்த மருத்துவ அலுவலர் ராஜேஸ்வரி மற்றும் துணை இயக்குனர் அலுவலக மாவட்ட பயிற்சி அலுவலர் டாக்டர் ஜோசுவா ஆகியோர் கலந்து கொண்டனர்.