தேசிய மாணவர் படை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம்


தேசிய மாணவர் படை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம்
x

தேசிய மாணவர் படை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் காட்பாடியில் நடந்தது.

வேலூர்

காட்பாடி 10-வது பட்டாலியன் அலுவலகத்தில் தேசிய மாணவர் படை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கமாண்டிங அதிகாரி லெப்டினன்ட் கர்னல் சஞ்சய்ஷர்மா தலைமை தாங்கி பேசினார். அப்போது தமிழ்நாட்டிலேயே அதிக எண்ணிக்கை என்.சி.சி.மாணவர்கள் கொண்ட பட்டாலியன் காட்பாடி 10-வது பட்டாலியன் ஆகும். என்.சி.சி.யில் மட்டுமல்லாது மாணவர்கள் படிப்பிலும் கவனம் செலுத்தி நல்ல முறையில் தேர்ச்சி பெற்று ராணுவ அதிகாரிகளாக வரவேண்டும் என்றார்.

நிர்வாக அலுவலர் லெப்டினன்ட் கர்னல் எஸ்.கே.சுந்தரம் முன்னிலை வகித்தார். வி.ஐ.டி. என்.சி.சி.அலுவலர் ரவிசங்கர் பாபு வரவேற்றார். இதில் சுபேதார் மேஜர் சட்பீர்சிங், அலுவலக கண்காணிப்பாளர் ஸ்ரீகாந்த், மக்கள் தொடர்பு அலுவலர் க.ராஜா மற்றும் 18 கல்லூரி அலுவலர்கள், 29 பள்ளிகளின் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் பயிற்சி பிரிவு சுபேதார் குமார் நன்றி கூறினார்.


Next Story