தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்பு


தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்பு
x

தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

வேலூர்

காட்பாடி காந்தி நகரில் உள்ள என்.சி.சி. 10-வது பட்டாலியன் அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பட்டாலியன் கமாண்டிங் அதிகாரி லெப்டினன்ட் கர்னல் சஞ்சய் ஷர்மா தலைமை தாங்கினார். நிர்வாக அலுவலர் லெப்டினன்ட் கர்னல் எஸ்.கே.சுந்தரம் முன்னிலை வகித்தார். மக்கள் தொடர்பு அலுவலர் க.ராஜா வரவேற்றார். பட்டாலியன் சுபேதார் மேஜர் சட்பீர் சிங் உள்பட பலர் தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சி குறித்து பேசினர். அதைத்தொடர்ந்து அனைவரும் தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை சரளா தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் மாரிமுத்து, ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர்கள், மாணவிகள், அலுவலக பணியாளர்கள் அனைவரும் தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


Next Story