தேசிய தன்னார்வலர்கள் ரத்த தான முகாம்


தேசிய தன்னார்வலர்கள் ரத்த தான முகாம்
x

தேசிய தன்னார்வலர்கள் ரத்த தான முகாமை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

வேலூர்

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்ற குழுமம் மற்றும் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில் தேசிய தன்னார்வலர்கள் ரத்ததான தின விழா நடந்தது. கல்லூரி டீன் செல்வி தலைமை தாங்கினார். மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பானுமதி, மருத்துவமனை கண்காணிப்பாளர் ரதிதிலகம், துணை முதல்வர் கவுரிவெலிங்கட்லா, குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ரத்த மாற்று நல அலுவலர் சிவராமன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

நீர் எவ்வாறு பூமிக்கும், உலகிற்கும் தேவையோ அது போல் மனிதர்களுக்கு ரத்தம் என்பது இன்றியமையாதது. விபத்து காலங்களில் படுகாயம் அடைபவர்களுக்கு அவசர உதவிக்காக பிறர் அளிக்கும் ரத்தமானது அவர்களின் உயிரை காப்பாற்றும். ஆகவே அனைவரும் ரத்ததானம் செய்ய முன் வந்து உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்றார்.

இதனைத் தொடர்ந்து அதிக முறை ரத்ததானம் செய்தவர்களுக்கு பதக்கங்கள், விருதுகள் மற்றும் சான்றுகளை வழங்கினார். மேலும் அனைவரும் ரத்த தானம் செய்ய வேண்டும் என மருத்துவக் கல்லூரி மாணவர்களுடன் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.


Next Story