தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்


தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்
x

மன்னார்குடியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலத்தை உதவி கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருவாரூர்

மன்னார்குடி:

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று மன்னார்குடியில் நடந்தது. தாசில்தார் அலுவலகத்தில் தொடங்கிய ஊர்வலத்தை மன்னார்குடி உதவி கலெக்டர் கீர்த்தனா மணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக மூத்த வாக்காளர் 2 பேரை உதவி கலெக்டர் கீர்த்தனா கவுரவித்தார். இதில் தாசில்தார் ஜீவானந்தம், மன்னார்குடி நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் மீனாமகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊர்வலம் மன்னார்குடியின் முக்கிய வீதிகள் வழியாக சென்று வ.உ.சி ரோட்டில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகத்தில் முடிந்தது. ஊர்வலத்தில் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் எனது வாக்கு எனது உரிமை என்ற வாசகம் எழுதிய பதாகைகளை ஏந்தி சென்றனர்.


Next Story