தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்


தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்
x

சோளிங்கரில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

சோளிங்கரில் தேசிய வாக்காளர் தினம் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. வட்டாட்சியர் ஆனந்தன் தலைமை தாங்கினார். தேர்தல் துணை வட்டாட்சியர் சுரேஷ், மண்டல துணை வட்டாட்சியர் அருள்செல்வம், வருவாய் ஆய்வாளர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் ராஜகோபால் வரவேற்றார்.

தக்கான்குளம் பகுதியில் இருந்து தொடங்கிய ஊர்வலம் அரக்கோணம் சாலையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் வரை சென்றது. ஊர்வத்தில் கலந்துகொண்டவர்கள், தேர்தலின் போது அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும், பணம் பெற்றுக்கொண்டு வாக்களிக்ககூடாது உள்பட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியவாறு சென்றனர்.

மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். தொடர்ந்து அனைவரும் வாக்களிக்க வேண்டும் என உறுதி மொழி ஏற்றனர்.

நிகழ்ச்சியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார், ரவி மற்றும் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.


Next Story