தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி
தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
விருதுநகர் அருகே சத்திரரெட்டியபட்டியில் ஊராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை மற்றும் வன்னிய பெருமாள் பெண்கள் கல்லூரி வரலாற்று துறை ஆகியவற்றின் சார்பில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அப்போது நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை விருதுநகர் தாசில்தார் பாஸ்கரன், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் பிரின்ஸ் ரஞ்சித் சிங், ஊராட்சி மன்ற தலைவர் மருதுராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பேரணி ஊரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பின் ஊராட்சி அலுவலகத்தை மீண்டும் வந்தடைந்தது. முன்னதாக ஊராட்சி மன்ற வளாகத்தில் கல்லூரி மாணவிகள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தெரு நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் திரளான கல்லூரி மாணவிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பயனாளிகள், ஊர் பொதுமக்கள் மற்றும் வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.