தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி


தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி
x

கடலூரில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் பாலசுப்பிரமணியம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கடலூர்


தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கடலூரில் நேற்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, தாசில்தார் பூபாலசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதையடுத்து கடலூர் ஜவான் பவன் சாலையில் இருந்து தொடங்கிய பேரணியானது பாரதி சாலை, பழைய கலெக்டர் அலுவலக சாலை வழியாக மஞ்சக்குப்பம் புனித வளனார் கல்லூரி வளாகத்தை சென்றடைந்தது. இதில் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் துணை தாசில்தார்கள் மணிகண்டன், லலிதா, வெற்றிசெல்வன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

இதையடுத்து மஞ்சக்குப்பம் தனியார் கல்லூரியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.

இதேபோல் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி நேற்று மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.


Next Story