நாட்டு நலப்பணித்திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி


நாட்டு நலப்பணித்திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 12 Feb 2023 12:15 AM IST (Updated: 12 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பேய்க்குளத்தில் நாட்டு நலப்பணித்திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி மாணவர்களின் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் பேய்க்குளம் பகுதியில் நடந்தது. பேய்க்குளம் பஜாரில் நடந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிக்கு ஸ்ரீவெங்கடேஸ்வராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி ஸ்ரீதர் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் வரவேற்றார். விழாவில் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

மாணவ-மாணவிகள் பல்வேறு விழிப்புணர்வு கருத்துகள் அடங்கிய கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். இதில் நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் போனி பாஸ், டாக்டர் ரமேஷ் பிரபு, கடாட்சபுரம் டி.என்.டி.டி.ஏ. பள்ளி தலைமை ஆசிரியர் மார்ட்டின் ரஞ்சித் சிங், சாலைப்புதூர் சுகாதார ஆய்வாளர் ஜேசுராஜ், பேய்க்குளம் வியாபாரிகள் சங்க துணை தலைவர் வின்சன், பேய்க்குளம் வாகன ஓட்டுனர் சங்க செயலாளர் காந்தி, சேகர பெருமன்ற உறுப்பினர் ஸ்டீபன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ஞான செல்வன் நன்றி கூறினார்.



Next Story