தேசிய கால்நடை இயக்க திட்டத்தில் 50 சதவீத மானியத்தில் புதிய தொழில் தொடங்கலாம்


தேசிய கால்நடை  இயக்க திட்டத்தில் 50 சதவீத மானியத்தில்  புதிய தொழில் தொடங்கலாம்
x
தினத்தந்தி 7 Oct 2022 12:15 AM IST (Updated: 7 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேசிய கால்நடை இயக்க திட்டத்தில்50 சதவீத மானியத்தில் புதிய தொழில் தொடங்கலாம் என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தேசிய கால்நடை இயக்க திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியம் பெற்று புதிய தொழில் தொடங்கி, தொழில் முனைவோராக உருவாக விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தொழில் முனைவோர்

மத்திய அரசு நிதியுதவியுடன் கூடிய தேசிய கால்நடை இயக்க திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தொழில் முனைவோரை உருவாக்குவதற்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் சேர்ந்து தொழில் முனைவோராக விரும்புவோர் தனிநபர், சுய உதவிக்குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை தொழில் முனைவோராக உருவாக்க மானியம் வழங்கப்படும்.

மானியம்

கிராமப்புற கோழிகள் இன மேம்பாட்டுக்கு தொழில் முனைவோரை உருவாக்க 50 சதவீதம் மானியம் அல்லது ரூ.25 லட்சம் மானியம், வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகள் இனவிருத்திக்காக தொழில் முனைவோரை உருவாக்க 50 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சம் ரூ.50 லட்சம் மானியம், பன்றி வளர்ப்பில் தொழில் முனைவோரை உருவாக்க 50 சதவீதம் மானியம், அல்லது அதிகபட்சமாக ரூ.30 லட்சம் மானியமாகவும், தீவன உற்பத்தியை பெருக்கவும், சேமிப்பு பிரிவு அமைக்கவும் 50 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.50 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெற விருப்பம் உள்ள பயனாளிகள் பொதுத்துறை வங்கிகள் மூலமாகவே அல்லது சுயநிதி நிறுவனத்திடம் இருந்து கடன் பெற்று திட்டத்தை செயல்படுத்தலாம். உரிய ஆவணங்கள் மற்றும் விரிவான திட்ட அறிக்கைகளுடன் உதயமித்ரா போர்ட்டலில் பதிவேற்றம் செய்யலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story