கோதுமை நாற்றில் இருந்து இயற்கை பானம் தயாரித்து வேளாண் மாணவிகள் அசத்தல்
கொடைரோடு அருகே கோதுமை நாற்றில் இருந்து இயற்கை பானம் தயாரித்து வேளாண் மாணவிகள் அசத்தியுள்ளனர்.
காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் 4-ம் ஆண்டு இளங்கலை வேளாண்மை பட்டப்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு பயிற்சி முகாம், கொடைரோடு அருகே உள்ள ஜே.ஊத்துப்பட்டி கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் மாணவிகள் பாலமுனீஸ்வரி, ஷெர்லி பிளஸ்சி, ஹேமபிரியா, லட்சுமி, அபிநயா ஆகியோர் திறன் மேம்பாட்டு மற்றும் தொழில்முனைவு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக அவர்கள் ஜே.ஊத்துப்பட்டியில் இயற்கை முறையில் கோதுமை நாற்றுகளை வளர்த்து, அதிலிருந்து சாறு பிழிந்து எடுத்து பானம் தயாரித்து வருகின்றனர். இந்த இயற்கை பானம், மனித உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றம் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிக்கும். உடல் எடையை குறைக்கும். சர்க்கரை புற்றுநோய்களை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது என்று மாணவிகள் தெரிவித்தனர். மேலும் கோதுமை நாற்றுகளில் இருந்து எடுக்கப்படும் இயற்கை பானம் விரைவில் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் வளாகத்திற்கு விற்பனைக்கு வரும் என்று மாணவிகள் தெரிவித்தனர்.