வெங்கடராமானுஜபுரத்தில் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை பயிற்சி முகாம்


வெங்கடராமானுஜபுரத்தில் விவசாயிகளுக்கு இயற்கை   வேளாண்மை பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 20 Oct 2022 12:15 AM IST (Updated: 20 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வெங்கடராமானுஜபுரத்தில் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை பயிற்சி முகாம் நடந்தது.

தூத்துக்குடி

உடன்குடி:

வெங்கடராமானுஜபுரத்தில் விவசாயிகளுக்கான இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சி முகாம் நடந்தது. உடன்குடி வட்டார வேளாண்மை உழவர்நலத்துறை சார்பில் நடந்த இம்முகாமிற்கு வேளாண்மை உதவிஇயக்குனர் வெங்கடசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஓய்வுபெற்ற வேளாண்மை இணை இயக்குனர் பாரதி, இயற்கை வேளாண்மை குறித்தும், தோட்டக்கலை அலுவலர்ஆனந்த், இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட விளைபொருட்களின் சந்தை விபரம் குறித்தும், வேளாண்மை உதவி அலுவலர் வினோபா, அரசு சார்ந்த திட்டங்கள் குறித்தும், தோட்டக்கலை உதவிஅலுவலர் அஜித் நாராயணன் பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை குறித்தும் விளக்கமளித்தனர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்த கொண்டனர். ஏற்பாடுகைள வட்டார தொழில்நுட்ப மேலாளர் ருக்மணி, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் வெள்ளத்துரை, சபிதாஸ்ரீ ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story