ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் நவசக்தி மகாயாகம்


ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் நவசக்தி மகாயாகம்
x
தினத்தந்தி 8 May 2023 12:15 AM IST (Updated: 8 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

உலக நன்மை வேண்டி ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் நவசக்தி மகாயாகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை

திருக்கடையூர்:

திருக்கடையூர் அருகே ஆக்கூரில் உள்ள வாள்நெடுங்கண்ணி அம்மன் உடனாகிய தான்தோன்றீஸ்வரர் கோவில் உள்ளது. சோழ மன்னர்களில் ஒருவரும் 63 நாயன்மார்களில் ஒருவரான கோச் செங்கட் சோழ மன்னரால் அமைக்கப்பட்ட மாடக் கோவில்களில் ஒன்றான இந்த கோவில் சுவாமி தானாக தோன்றியதால் தான் தோன்றீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். மேலும் கோவிலில் 63 நாயன்மார்களில் ஒருவரான சிறப்புலி நாயனார் தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார். பிரசித்தி பெற்ற இக்கோவிலில் நேற்று உலக நன்மை வேண்டி நவசக்தி மகாயாகம் நடந்தது. இதில் ஒன்பது யாக குண்டங்கள், ஒன்பது சிவாச்சாரியார்கள், 1008 மூலிகை பொருட்கள் கொண்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடர்ந்து வேத பாராயணம், மந்திரங்கள் முழங்க கடம் புறப்பட்டு கோவிலை வந்தடைந்தது. பின்னர் தான் தோன்றீஸ்வரர், நெடுங்கண்ணி அம்மன் ஆகிய சாமிகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story