நவபாரத் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா
நவபாரத் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா
மன்னார்குடி அருகே உள்ளிக்கோட்டையில் உள்ள நவபாரத் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 35-வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் ராஜவேல் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினர்களாக ஜி.ஐ. ஏற்றுமதி நிறுவனத்தின் நிறுவனர் இளவரசு, சென்னை தலைமை செயலக அதிகாரி ஆர்.கவியரசு ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். விழாவில் இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் படி 25 சதவீத இடங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மாணவ-மாணவிகள் சேர்க்கை செய்வதற்கு வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெற்றோர்களுக்கு இந்த விவரத்தினை தெரிவிக்கும் வகையில் தனியார் பள்ளிகளில் 25 சதவீத மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் பள்ளியின் முதல்வர் தமிழழகி சக்தி கண்ணன், நிர்வாக மேலாளர் தமிழரசன், நிறுவனர் கலைச்செல்வி மலையரசன், உள்ளிக்கோட்டை ஒன்றியக்குழு உறுப்பினர் ஜெயக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி, நவபாரத் பள்ளியின் தலைவர் தர்மராஜ் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.