ஸ்ரீபாலா பீடத்தில் நவராத்திரி இன்னிசை விழா
நெமிலி ஸ்ரீபாலா பீடத்தில் நவராத்திரி இன்னிசை விழாவை சீர்காழி சிவசிதம்பரம் தொடங்கி வைத்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஸ்ரீ பாலா பீடத்தில் நவராத்திரி இன்னிசை விழா நடைபெற்றது. பீடாதிபதி நெமிலி கவிஞர் எழில்மணி முன்னிலையில் பாடகர் சீர்காழி சிவசிதம்பரம் நவராத்திரி இன்னிசை விழாவை அம்பாள் பாடல் பாடி நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து நெமிலி கவிஞர் எழில்மணி எழுதிய அன்னை பாலா அற்புதங்கள் எனும் வானதி பதிப்பகத்தின் நூலை வெளியிட்டார். அன்னை பாலா பீட கலச ஸ்தாபனத்தை பால பீட நிர்வாகி மோகன்ஜி நடத்தி வைத்தார். குருஜி நெமிலி பாபாஜி அன்னை ஆரத்தியை நிகழ்த்தினார்.
மேலும் இவ்விழாவில் கலந்து கொண்ட பாடகி சுசித்ராவுக்கு பாலரத்னா பட்டம் வழங்கப்பட்டது. வானதி பதிப்பகத்தின் உரிமையாளர் ராமநாதன் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பாலா பீட செயலாளர் முரளிதரன் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அன்னை பாலா ஆத்மீக குடும்பங்கள் செய்திருந்தனர்.