நாசரேத் கால்பந்து போட்டி: காயல்பட்டினம், தென்காசி அணிகள் வெற்றி
நாசரேத்தில் நடந்து வரும் கால்பந்து போட்டியில் காயல்பட்டினம், தென்காசி அணிகள் வெற்றிபெற்றன.
தூத்துக்குடி
நாசரேத்:
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பள்ளிகளுக்கு இடையே மாநில அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் காயல்பட்டினம் எல்.கே. மேல்நிலைப் பள்ளி அணியை, 0-1 என்ற கோல் கணக்கில் ஊட்டி திரு இருதய மேல்நிலைப்பள்ளி அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் தென்காசி அணியை ஆறுமுகநேரி பியர்ல்ஸ் பப்ளிக் ஸ்கூல் அணி 2-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. மாலையில் நடைபெற்ற போட்டியில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி அணிைய 4-2என்ற கோல் கணக்கில் காயல்பட்டினம் சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி அணி வென்றது.
Related Tags :
Next Story