நாசரேத் மர்காசிஸ் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி் திட்ட முகாம்


நாசரேத் மர்காசிஸ் மேல்நிலைப்பள்ளி  நாட்டு நலப்பணி் திட்ட முகாம்
x
தினத்தந்தி 12 Nov 2022 12:15 AM IST (Updated: 12 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாசரேத் மர்காசிஸ் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி் திட்ட முகாம் நடந்தது.

தூத்துக்குடி

நாசரேத்:

நாசரேத் மர்காசிஸ் மேல் நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் சமத்துவபுரத்தில் சிறப்பு முகாம் 7 நாட்கள் நடைபெற்றது. முகாமினை மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சுதாகர் தலைமை தாங்கி தொடக்கி வைத்தார். பிடாநேரி பஞ்சாத்து தலைவர் சலேட் மெர்சி, பள்ளி தலைமை ஆசிரியர் ஜெபகரன் பிரேம்குமார், பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை அன்பாய் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்து மரக்கன்றுகள் நட்டு தொடங்கி வைத்தனர். சிறப்பு முகாமில் அரசு மருத்துவ அலுவலர் டி.எ.ஜே.ஜோசுவா பிரவுன் தலைமையில் இலவச பொது மருத்துவ முகாமும், அரசு கால்நடை மருத்துவர் முகேஷ் தலைமையில் இலவச கால்நடை மருத்துவ முகாமும், சிறு தொழில் பயிற்சியாளர் பாக்கியவதி மூலம் சிறுதொழில் கைவினைப் பொருட்கள் தயார் செய்தல் பயிற்சியும், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை குழுவினரால் இலவச கண்மருத்துவ முகாமும், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் உமா மகேஸ்வரி மூலம் விசைப்பந்துகள் தயாரிப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டது. முகாம் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பள்ளி உதவி தலைமையாசிரியர் சார்வஸ் திரவியம் தலைமை தாங்கிப் பேசினார். விளையாட்டுபோட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் பொன்செல்வன், எல்.ஐ.டி.டி.எஸ். கூட்டமைப்பு தூத்துக்குடி மாவட்ட தலைவர் பெர்சில், தூத்துக்குடி மாவட்ட என்.எஸ்.எஸ். தொடர்பு அலுவலர் முருகேசன், உட்பட பலர் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் தனபால், ஜெய்சன் சாமுவேல் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story