பூம்புகாரில் இருந்து காரைக்கால் நோக்கி தேசிய மாணவர் படை மாணவர்கள் கடல் வழியாக சாகச பயணம்


பூம்புகாரில் இருந்து காரைக்கால் நோக்கி தேசிய மாணவர் படை மாணவர்கள் கடல் வழியாக சாகச பயணம்
x

பூம்புகாரில் இருந்து காரைக்கால் நோக்கி தேசிய மாணவர் படை மாணவர்கள் கடல் வழியாக சாகச பயணம் மேற்கொண்டனர்.

மயிலாடுதுறை

திருவெண்காடு:-

பூம்புகாரில் இருந்து காரைக்கால் நோக்கி தேசிய மாணவர் படை மாணவர்கள் கடல் வழியாக சாகச பயணம் மேற்கொண்டனர்.

கடல் சாகச பயணம்

தமிழ்நாடு தேசிய மாணவர் படை கப்பல் படை பிரிவு மற்றும் புதுவை தேசிய மாணவர் கப்பல் படை மாணவர்கள் கடல் சாகச பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இதை கடந்த 6-ந் தேதி புதுச்சேரியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.

இந்த சாகச பயணத்தில் 25 மாணவிகள் உள்பட 60 தேசிய மாணவர் படை மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் புதுச்சேரியில் இருந்து கடலூர், பழையாறு வழியாக பூம்புகார் வந்தனர்.

காரைக்கால் புறப்பட்டனர்

பின்னர் நேற்று பூம்புகார் துறைமுகத்தில் இருந்து காரைக்காலுக்கு புறப்பட்டு சென்றனர். இந்த பயணத்தை சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா கொடியசைத்து தொடங்கி வைத்தார். சாகச பயண குழுவினருடன் 3 கடற்படை அதிகாரிகளும், 4 தேசிய மாணவர் படை இணை அலுவலர்களும் பயணம் மேற்கொள்கிறார்கள். 3 பாய்மர படகுகளில் மாணவர்கள் பயணிக்கின்றனர். இந்த குழுவினர் ரத்த தான முகாம், மரம் நடுதல், தூய்மைப்பணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்கள்.

அடுத்த ஆண்டு (2023) ஜனவரி மாதம் நடைபெற உள்ள குடியரசு தின விழாவை முன்னிட்டு மாணவர்கள் இந்த கடல் சாகச பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story