அம்மாபேட்டை அருகே ஊருக்குள் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது
அம்மாபேட்டை அருகே ஊருக்குள் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது.
ஈரோடு
அம்மாபேட்டை
அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூரை அடுத்துள்ள பந்தல் கரடு பகுதியில் நேற்று இரவு மலைப்பாம்பு நெளிந்தபடி சென்று கொண்டிருந்தது அதனை கண்ட அப்பகுதி இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே ஒன்று சேர்ந்து அந்த பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் இது குறித்து சென்னம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனச்சரகர் ராஜா தலைமையில் வனத்துறையினர் அங்கு சென்று மலைப்பாம்பை சென்னம்பட்டி வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, 'பிடிபட்டது 8 அடி நீள மலைப்பாம்பு' என்றனர்.
Related Tags :
Next Story