அம்மாபேட்டை அருகே தாய் இறந்த அதிர்ச்சியில் மகனும் உயிரிழப்பு


அம்மாபேட்டை அருகே தாய் இறந்த அதிர்ச்சியில் மகனும் உயிரிழப்பு
x
தினத்தந்தி 14 Jun 2023 3:25 AM IST (Updated: 14 Jun 2023 12:12 PM IST)
t-max-icont-min-icon

அம்மாபேட்டை அருகே தாய் இறந்த அதிர்ச்சியில் மகனும் உயிரிழந்தாா்.

ஈரோடு

அம்மாபேட்டை

அம்மாபேட்டை அருகே உள்ள ஆனைக்கவுண்டனூர் கல்லகாட்டு தோட்டத்தை சேர்ந்தவர் கண்ணுபையன். இவர் இறந்துவிட்டார். அவருடைய மனைவி அய்யம்மாள் (60). இவர்களுடைய மகள் விஜயா (42), மகன் மாதேஷ் (வயது 40). இதில் விஜயா திருமணம் ஆகி கணவருடன் வசித்து வருகிறார். மாதேஷ் திருமணம் செய்து மனைவியை பிரிந்து தாய் அய்யம்மாளுடன் வசித்து வந்தார். 2 பேரும் கூலி வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில் உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட அய்யம்மாள் நேற்று முன்தினம் அவரது வீட்டில் உயிரிழந்தார். தாய் உடலை பார்த்து மாதேஷ் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இந்த நிலையில் தாய்க்கு இறுதி சடங்கு செய்துவிட்டு வீட்டுக்கு வந்த மாதேஷ் அவர் நினைவிலேயே இருந்து வந்துள்ளார். தாய் இறந்த துக்கத்தை அவரால் தாங்கி கொள்ள முடியவில்லை. அந்த அதிர்ச்சியில் மாதேசும் நேற்று மாலை உயிரிழந்தார்.


Next Story