அந்தியூர் அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து 9 பேர் காயம்
9 பேர் காயம்
பவானி அருகே உள்ள ஜம்பையில் இருந்து அத்தாணி வழியாக டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையத்துக்கு மக்காச்சோளம் ஏற்றிக்கொண்டு சரக்கு ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. சரக்கு ஆட்டோவை வாணிப்புத்தூர் பகுதியைச் சேர்ந்த சபேஷ் குமார் (வயது 40) என்பவர் ஓட்டி சென்றார். வாகனத்தில் 6 ஆண்கள், 3 ஆண்கள் என மொத்தம் 9 தொழிலாளர்கள் அமர்ந்திருந்தனர்.
அத்தாணி பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது திடீரென சரக்கு ஆட்டோவின் டயர் வெடித்தது. இதனால் சரக்கு ஆட்டோ தாறுமாறாக ஓடியதில் ரோட்டின் ஓரத்தில் கவிழ்ந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி 9 பேரும் காயம் அடைந்தனர். டிரைவருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலமாக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.