அந்தியூர் அருகேகிணற்றில் தவறி விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு


அந்தியூர் அருகேகிணற்றில் தவறி விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு
x

அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு உயிருடன் மீட்கப்பட்டது

ஈரோடு

அந்தியூர் அருகே உள்ள ஜி.எஸ்.காலனி உரக்கடைக்காரர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செம்மலை கவுண்டர். இவரது பசுமாடு தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த மாடு அங்குள்ள 70 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்துவிட்டது. 40 அடி ஆழமுள்ள தண்ணீரில் மாடு தத்தளித்து கொண்டிருந்தது.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் அந்தியூர் தீயணைப்பு நிலைய அதிகாரி ராபர்ட் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் கயிறு கட்டி பசு மாட்டை உயிருடன் மீட்டனர்.


Next Story