அந்தியூர் அருகே பஸ்- மோட்டார்சைக்கிள் மோதல்; லாரி டிரைவர் பலி
அந்தியூர் அருகே பஸ்- மோட்டார்சைக்கிள் மோதியதில் லாரி டிரைவர் பலி யானாா்
ஈரோடு
சேலம் மாவட்டம் கொளத்தூர் கத்திரிப்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 35). லாரி டிரைவர். இவர் ஈரோடு மாவட்டம் அந்தியூருக்கு மோட்டார்சைக்கிளில் வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அந்தியூரை அடுத்த வெள்ளித்திருப்பூரில் இருந்து கொளத்தூர் ெசல்லும் சாலையில் தனியார் திருமண மண்டபம் அருகே சென்றபோது, எதிரே வந்த தனியார் பஸ்சும், லட்சுமணனின் மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் லட்சுமணன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேேய பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அறிந்ததும் வெள்ளித்திருப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று லட்சுமணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story