ஆண்டிப்பட்டி அருகேஆமை வேகத்தில் நடைபெறும் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள்:விரைந்து முடிக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


ஆண்டிப்பட்டி அருகேஆமை வேகத்தில் நடைபெறும் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள்:விரைந்து முடிக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 29 Jan 2023 12:15 AM IST (Updated: 29 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி அருகே நடைபெறும் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் விரைந்து முடிக்கப்படுமா என்று எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.

தேனி

கூட்டுக்குடிநீர் திட்டம்

ஆண்டிப்பட்டி, கடமலை-மயிலை, தேனி ஆகிய ஒன்றிய பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து மேற்கண்ட பகுதிகளுக்கு வைகை அணையில் இருந்து குடிநீர் வழங்குவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு ரூ.162 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் கடந்த 2020-ம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் பணிகள் மேற்கொள்ளவும் அரசு உத்தரவிட்டது.

இதனையடுத்து அப்போதைய துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கியது. தொடங்கி பின்னர் வைகை அணை குரியம்மாள்புரம் கிராமத்திற்கு அருகே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றது. இதுதவிர வைகை அணையில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு பகுதிகள் வரை தரையில் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்றது.

விரைந்து முடிக்க கோரிக்கை

இந்த திட்டத்திற்காக 40 இடங்களில் பிரமாண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. பணிகள் வேகமாக நடைபெற்றதால் புதிய குடிநீர் திட்டம் ஒரு ஆண்டிற்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு பின்னர் புதிய குடிநீர் திட்டத்திற்காக பணிகள் தொய்வடைய தொடங்கியது. தற்போது புதிய குடிநீர் திட்டத்திற்கான பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்திற்கான பணிகள் தொடங்கி 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் 70 சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளது.

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை போதுமான அளவு பெய்யாத காரணத்தால் வரும் கோடையில் தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே லட்சக்கணக்கான மக்கள் பயன்பெறும் வைகை அணை புதிய குடிநீர் திட்டத்தை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story